மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்
நிவாரண உதவி
கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட் டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங் கினார். ஒன்றிய செயலாளர் துரை மாது, ஒன்றிய துணைசெயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ராஜ மாணிக்கம் வரவேற்றார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட சுற்று சூழல் துணை அமைப்பாளர் மாதவன் மிக்ஜாம்- புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறிகள், பிரட் உள் ளிட்ட நிவாரண பொருட் களை வழங்கி பேசினார். அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் எ.வ.வேலு, தரணிவேந்தன் வழிகாட்டுதல்படி மாவட்டம் முழுவதும் சுற்றுசூழல் அணி சார்பாக | ஏழை எளிய மக்களுக்கு புயல் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. - இதன்படி கொங்கராம்பட்டு ஏரிக்கரை அருகே வசிக்கும் மூங் கில் கூடை முடைவோர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். அவருக்கும் தமிழக அரசுக்கும் நிவாரண பொருட் களை பெற்ற மக்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் ராஜேஷ், செல்வராஜ், மணிகண்டன், குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story