இராசிபுரம் மக்கள் நல குழு சார்பில்‌ நிவாரண பொருட்கள் வழங்கல்

இராசிபுரம் மக்கள் நல குழு சார்பில்‌ நிவாரண பொருட்கள் வழங்கல்

இராசிபுரம் மக்கள் நல குழு சார்பில்‌ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இராசிபுரம் மக்கள் நல குழு சார்பில்‌ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் ஏற்பட்டுள்ள புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை இராசிபுரம் மக்கள் நல குழு சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், தனி துணை மாவட்டத் ஆட்சியர் -சமூக பாதுகாப்பு திட்டம் பிரபாகர், சமூக பாதுகாப்பு திட்டத்தனி வட்டாட்சியர்கள் பாஸ்கர்.கிருஷ்ணன் ஆகியோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குழுவின் தலைவர் வி.பாலு, கௌரவ தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் நல்வினை செல்வன், பொருளாளர் கா. முருகன், ஒருங்கிணைப்பாளர் ஜெ.சபீர், கல்விக்குழு பொறுப்பாளர் பா.மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிவாரண பொருட்களான அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை,ரவை, துவரம் பருப்பு,எண்ணெய், பிஸ்கட், சோப்புகள் உள்ளிட்ட 1லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story