பாஜக சார்பில் சென்னைக்கு நிவாரணப்பொருட்கள்

பாஜக சார்பில் சென்னைக்கு நிவாரணப்பொருட்கள்

சென்னைக்கு பாஜக சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பினா் 

சென்னைக்கு பாஜக சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பினா்
சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மழைநீர் கொட்டித் தீர்த்தது. இந்த மழையினால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியவாசியப் பொருள்கள் கிடைக்காத நிலை உள்ளது. அவா்களுக்கு உதவும் வகையில், விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் அரிசி, பருப்பு, எண்ணெய், நாப்கின், போர்வை, சுடிதார் உள்ளிட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சென்னை பா.ஜ.கா.தலைமை அலுவலகம் கமலாயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட பிரச்சார பிரிவு காமாட்சி, வெள்ள நிவாரண திட்ட குழு உறுப்பினர் ராஜகோபாலன், பிரச்சார பிரிவு காமாட்சி, மாவட்ட பொருளாளர் புஷ்ப குமார், ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் சுப்புராஜ் மற்றும் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை கண்டெய்னர் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story