காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது
பிஸ்கட், பிரெட், அரிசி, பாய், வேஷ்டி, சேலை, உள்ளிட்ட ரூ 2 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருள் வழங்கப்பட்டது
தமிழகத்தில் சென்னையை அடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விட்டிருந்த நிலையில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழை வெள்ளத்தில் அங்கு வசித்த பொதுமக்கள் ஏராளமானோர் வீடு மற்றும் தங்களது உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் , தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றன்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தனது சொந்த நிதியிலிருந்து பிஸ்கட், பிரெட், அரிசி, பாய், வேஷ்டி, சேலை, உள்ளிட்ட ரூ 2 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருள்களை வழங்கியுள்ளார். இந்த அத்தியாவசியப் பொருள்கள் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பாலகிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், நகரத்தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலு முத்து, நகர்மன்ற உறுப்பினர்கள், ராஜ்குமார், பால்பாண்டி, திலக் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story