சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப்பொருட்கள்
சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 1.3 டன் நிவாரணப்பொருட்கள் அனுப்புவைக்கப்பட்டன.
கோவை:தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக நெல்லை,குமரி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் சிக்கி தவித்து வருகின்றன.இவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் திருநெல்வேலி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன், பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது.
Next Story