லால்குடி அருகே சாயும் நிலையில் இருந்த புளியமரம் அகற்றம்

லால்குடி அருகே சாயும் நிலையில் இருந்த புளியமரம் அகற்றம்

சாலையில் சாய்ந்த புளியமரம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை கோமாக்குடி இடையே உள்ள சாலையில் ஆபத்தாக சாயும் நிலையில் இருந்த புளிய மரத்தை அகற்றிய ஊராட்சி நிர்வாகம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பின்னவாசலில் இருந்து செங்கரையூர் செல்லும் சாலையில் செம்பரை கோமக்குடி இடையே சாலையோரம் இருந்த புளியமரம் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மரத்தின் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் பேருந்துகள் உயரமான வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மரத்தை அகற்ற நேரில் கோரிக்கை வைத்தார்.மேலும் கடந்த மார்ச் மாதம் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். சமூக ஆர்வலரின் கோரிக்கை ஏற்று சாய்ந்த நிலையில் இருந்த புளிய மரத்தை செம்பரை ஊராட்சி மன்ற நிர்வாகம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து ஏற்படுவதற்க்கு முன் ஆபத்தான நிலையிலிருந்த புளிய மரத்தை அகற்றிய செம்பரை ஊராட்சி மன்ற தலைவர் மணி மற்றும் அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story