சங்கரன்கோவிலில் அமல செடிகள் அகற்றம்

சங்கரன்கோவிலில் அமல செடிகள் அகற்றம்

சங்கரன்கோவிலில் நீர் நிலை மாசுப்படுத்தும் அமல செடிகள் விவசாயிகள் முன்வந்து அகற்றினர்.


சங்கரன்கோவிலில் நீர் நிலை மாசுப்படுத்தும் அமல செடிகள் விவசாயிகள் முன்வந்து அகற்றினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு பாட்டக்குளத்தில் மழைநீர் நிறைந்து காணப்படுகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் உயர்ந்ததால் பொதுமக்கள் தண்ணீர் பஞ்சம் இன்றி வருகின்றனர். மேலும் ஆடு மாடுகள் குடிப்பதற்கும் குளத்தி நீர் பயன்பட்டு வருகின்றனர் இதனால் அமல செடிகள் குளத்தில் பாதி அளவு ஆக்கிரமிப்பு செய்ததால் குளத்து நீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட குளத்தி நீரை பயன்படுத்தும் அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து அமல செடிகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவர்கள் கூறும் பொழுது இந்தக் குளத்தில் கழிவுநீர் கலப்பதை அரசு தடை செய்து அமலைச் செடிகள் அகற்றுவதற்கு எங்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story