பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நாட்டிய எல்லை கற்கள் அகற்றம்

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நாட்டிய எல்லை கற்கள் அகற்றம்

பொதுப்பணித்துறை

மிடலம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் எல்லை கற்கள் அகற்றப்பட்டது

கிள்ளியூர் தாலுகாவுக்குட்பட்ட மிடாலம் வருவாய் கிராமத்தில் உள்ள பெருங்குளத்தை மண் நிரப்பி நீர் நிலைக்கு இடையூறு செய்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த வாரம் குளத்தை அளவீடு செய்து எல்கை கல் நாட்டப்பட்டன.

இந்த நிலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்திற்கு சொந்தம் கொண்டாட கூடிய மிடாலம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மர்ம நபர்களால் எல்கை கல்களை பிடுங்கி அப்புறப்படுத்தி உள்ளனர்.இதை அறிந்த அப்பகுதி விவசாய மக்கள் மிடாலம் நீரினை பயன்படுத்தும் சங்க தலைவர் கோபால் என்பவருக்கு புகார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், உடனடியாக சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து பாலூர் நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் காவல்துறையில் புகார் தெரிவித்து அந்த பகுதியை ஆய்வு செய்தனர்.மேலும் இந்த செயலை செய்தவர்கள் மீது தகுந்த குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் நீர்வள அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளதாகவும், நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

Tags

Next Story