பாபநாசத்தில் ஆபத்தான மின்கம்பங்கள் அகற்றம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் பிரதான சாலையில் பள்ளி கல்லூரிகளுக்கு இடையே இடது புறம் சாலையில் 2 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது .இந்த மின் கம்பங்கள் விழும் நிலையில் ஆபத்தாக இருந்து வந்தது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அதிக அளவில் சென்று வந்து கொண்டிருந்தனர் அதிக வாகனங்களும் கடந்து செல்லும் சாலையாக இருந்து வந்தது.
இதை உடனடியாக விபத்து ஏற்படும் முன் பழுதடைந்த 2 மின் கம்பங்களை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர் .
உடனே இது குறித்து பாபநாசம் உதவி செயற்பொறியாளர் கருணாகரன் உதவி பொறியாளர் சாஜாத்தி ஆக்க முகவர் மணிவண்ணன் மின்பாதை ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் மின்பணியாளர்கள் உடனடியாக ஆபத்தான நிலையில் இருந்த 2 மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை அப்பகுதியில் அமைத்துக் கொடுத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.