சேலம் புதிய பஸ் நிலையத்தில்ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சேலம் புதிய பஸ் நிலையத்தில்ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றியும், அத்துமீறிய கடைகளுக்கு சீல் வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றியும், அத்துமீறிய கடைகளுக்கு சீல் வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் இரவு, பகல் என எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் மாநகராட்சி சார்பில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. இந்த கடையின் முன்பு சிலர் ஆக்கிரமித்து அதிலும் கடைகள் வைத்து உள்ளனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பயணிகள் நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் அசோக்குமார், செயற்பொறியாளர் பழனிசாமி தலைமையில் அலுவலர்கள், ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள 2 ஓட்டல்களுக்கு சீல் வைத்தனர். இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறும் போது, தற்போது சீல் வைக்கப்பட்டு உள்ள 2 ஓட்டல்களும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.96 லட்சம் கட்டவில்லை. இதையடுத்து வாடகை பாக்கியை செலுத்த வலியுறுத்தி முறையாக கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் அவர்கள் வாடகை பாக்கியை கட்டவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 ஓட்டல்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்று கூறினார். ஆக்கிரமிப்பு அகற்றும் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன.

Tags

Read MoreRead Less
Next Story