சிவகாசி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி அருகே  ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகாசி அருகே தேர் திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்..ஏராளமான போலீஸார் குவிப்பு...
சிவகாசி அருகே தேர் திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் (ஜூன் 25) நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருத்தங்கல் நான்கு ரத வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி நகரமைப்பு அலுவலர் மதியழகன் தலைமையில் மேற்பார்வையாளர் முத்துராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் நான்கு ரத வீதிகளில் கடைகள் முன் இருந்த செட், கட்டுமானம், தள்ளுவண்டி என 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை காவல்துறை மற்றும் மாநகராட்சி வருவாய் துறையினர் உதவுடன் இடித்து அகற்றினர்.மேலும் பாதுகாப்பு நலன் கருதி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags

Next Story