நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நெடுஞ்சாலைத் துறை சார்பில் வந்தவாசி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.


நெடுஞ்சாலைத் துறை சார்பில் வந்தவாசி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.

நெடுஞ்சாலைத் துறை சார்பில் வந்தவாசி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. வந்தவாசி நகரில் பஜார் வீதி, கோட்டை மூலை, தேரடி, காந்தி சாலை, அச்சிறுபாக்கம் சாலை, ஆரணி சாலை உள்ளிட்ட பிர தான சாலைகளில் உள்ள சாலை யோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்குபெரும்இடை யூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு புகார்கள் சென்றன.

மேலும் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து பஜார் வீதி, தேரடி வழியாக புதிய பேருந்து நிலைய அணுகுசாலை சந்திப்பு வரை ரூ.2.75 கோடி செலவில் சிறுபாலங்கள் மற்றும் தார்ச் சாலை அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஆக்கிரமிப்பு களை அகற்றிக் கொள்ளும்படி வியாபாரிகளுக்கு நெடுஞ்சா லைத் துறை சார்பில் சில நாள்களுக்கு முன் முன்னறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரதான சாலைகளில் உள்ள சாலை யோர ஆக்கிரமிப்புகளை பொக் லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், சாலை ஆய்வாளர் துலுக்கானம் உள்ளிட்டோர் முன்னிலையில் வந்தவாசி தெற்கு போலீஸார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Tags

Next Story