பெயர் நீக்கம்: PEOPLE FOR ANNAMALAI அமைப்பினர் கண்டன் ஆர்ப்பாட்டம்

பெயர் நீக்கம்: PEOPLE FOR ANNAMALAI அமைப்பினர் கண்டன் ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர்
பெயர் நீக்கம் செய்யபட்டதை கண்டித்து கோவையில் "PEOPLE FOR ANNAMALAI" அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து "PEOPLE FOR ANNAMALAI" அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் வாக்காளர் பெயர் பட்டியலில் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தரப்பில் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதை கண்டித்து கோவை வட்டாட்சியர் அலுவலகம் அருகே "PEOPLE FOR ANNAMALAI" அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் எனவும் வாக்குரிமை ஜனநாயக உரிமை உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டே நீக்கப்பட்டு இருப்பதாகவும்,

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்ததோடு தங்களின் வாக்கு மறுக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனு அளிக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதில் பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story