சென்னிமலை சாலையில் திருமண விழாவில் நடப்பட்ட கட்சி கொடிகள் அகற்றம் 

சென்னிமலை சாலையில் திருமண விழாவில் நடப்பட்ட கட்சி கொடிகள் அகற்றம் 

சாலையோரத்தில் நடபட்டுள்ள கொடிகம்பங்கள்

காங்கேயம் சென்னிமலை சாலையில் திருமண விழாவில் நடப்பட்ட கட்சிக்கொடிகள் தேர்தல் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் அகற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பிஜேபி கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா காங்கயம் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நேற்று முன்தினம் இரவு கட்சி கொடி கம்பங்களை சாலையோரங்களில் கட்டி திருமணத்திற்கு வரும் கட்சி நிர்வாகிகளை வரவேற்கும் விதமாக இருந்தது. மேலும் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கட்சி கொடிக்கம்பங்கள் கட்ட 48 மணிநேரத்திற்கு முன்பே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் திருமண வீட்டார்கள் அனுமதி கடிதத்தை வழங்கிவிட்டு காங்கேயம் சென்னிமலை சாலையில் கொடி கம்பங்களை நட்டுவைத்தனர். இதை அடுத்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட பறக்கும்‌படை தேர்தல் அதிகாரி மீனாட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதின் பேரில் உடனடியாக அந்த கம்பங்கள் அங்கிருந்து இன்று சம்பந்தப்பட்டவர்கள் அகற்றினர்.

Tags

Next Story