சேலம் ஏற்காடு அடிவாரத்தில் பிளாஸ்டிக் பைகள் அகற்றும் பணி
பிளாஸ்டிக் பைகள் அகற்றும் பணி
புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி முலம் சேலம் ஏற்காடு அடிவாரத்தில் பிளாஸ்டிக் பைகள் அகற்றும் பணி நடைபெற்றது.
சேவகன் அறக்கட்டளை சார்பில் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகள் அகற்றும் முகாம் சேலம் ஏற்காடு அடிவார பகுதியில் நேற்று நடைபெற்றது. சேவகன் அறக்கட்டளை நிறுவனர் பிரதீப், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், செயலாளர் பூபதி ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர். ஏற்காடு அடிவாரம் பகுதியில் இருந்து 60 அடி பாலம் வரை மலை ஏறும் பகுதியில் இருபுறத்திலும் கிடந்த பிளாஸ்டிக் பைகளை அகற்றினர். தொடர்ந்து ஏற்காட்டுக்கு சென்ற கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி பயணத்தின்போது பிளாடிக் பைகளை வீச வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம். புற்றுநோயை தவிர்ப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 35 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story