ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கோப்பு படம் 

ராமநாதபுரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 22.05.24-ம் தேதி சாமி சிலை வைப்பது தொடர்பாக இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் காயம் அடைந்த ராமர் 25.05.24 தேதியன்று இறந்துவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் வழக்கு பதிவு செய்து சாட்சிகள் விசாரணையின் அடிப்படையில் ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம் பெண் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சத்திய சீலா இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் நேற்று முன் தினம் பெங்களூரில் வைத்து சத்தியசீலா மற்றும் ராம்குமார் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் துரை, பெண் காவல் ஆய்வாளர் சத்தியசீலாவை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story