மயிலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மயிலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மயிலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இரண்டு மாதங்களுக்கும் முன்பே சாலை அமைக்கும் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லி இருந்த நிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த தழுதாளியில் இருந்து வெள்ளிமேடுபேட்டை வரை இரு வழிச்சாலையாக இருந்தது. தற்போது இந்த சாலை கலைஞரின் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மயிலம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது, பாதுகாப்பு பணியில் மயிலம் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

Tags

Next Story