மருவத்தூர் கிராமத்தில் தேங்கி நின்ற கழிவு நீர் அகற்றம்
மருவத்தூர் கிராமத்தில் தேங்கி நின்ற கழிவு நீர் அகற்றம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் கிராமத்தில் தெற்கு தெருவில் கழிவுநீர் தேங்கி கிடப்பதாகவும், கொசு தொல்லை, நாய் மற்றும் பன்றிகளால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ள தாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைதொ டர்ந்து மாவட்ட கலெக்டர் கற்பகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதனடிப்படையில், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பொக் லைன் எந்திரம் மூலமாக அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு புதிதாக 4 சிமெண்டு குழாய்கள் அமைக்கப்பட்டு, தேங்கி நின்ற கழிவுநீர் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Next Story