புதுப்பிக்கப்பட்ட சாலை வரியை குறைக்க முறையீடு
வாகனங்கள்
புதுப்பிக்கப்பட்ட சாலை வரியை குறைக்க முறையிடப்படுள்ளது.
வத்தலக்குண்டு சுற்றுலா கார் வேன் ஓட்டுனர், உரிமையாளர்கள் சங்கத்தினர் புதுப்பிக்கப்பட்ட சாலை வரியை குறைக்க வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள பிற மாநில 'பெர்மிட்'களை உடனடியாக வழங்க வலியுறுத்தி போக்குவரத்து கழக மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாஸ்மினிடம் மனு அளித்தனர்.
இதன் சங்க நிர்வாகி பாண்டிமுத்து கூறுகையில்,'' நடைமுறையில் உள்ள காலாண்டு வரியை அனைத்து வேன் உரிமையாளர்களும் செலுத்தி விட்டனர். இந்த வரி இந்தமாத கடைசிவரை செல்லுபடியாகும். இந்நிலையில் புதிய வரியை உடனடியாக கட்ட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. காலாண்டு வரியை கட்ட முடியாமல் தவிக்கும் நிலையில் புதிய வரியை எப்படி கட்டுவது என்றார்.
Tags
Next Story