தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகள் திறப்பு !
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகள் திறப்பு ரயில்வே கோட்ட மேலாளர் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புரனமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகள் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வறைகள் மழைகாலங்களில் ஆங்காங்கே மழைநீர் கசிந்து பழுதானதையடுத்து, அதை புனரமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இதன் பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம், தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது. அதன்படி 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு, வெள்ளியன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார். அதேபோல் தஞ்சாவூர் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அதனையும் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் செந்தில்குமார், ரவிக்குமார், வினோத்குமார், பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story