அழகிய சிங்கபெருமாள் கோவில் குளம் சீரமைப்பு

அழகிய சிங்கபெருமாள் கோவில் குளம் சீரமைப்பு

 குளம் சீரமைப்பு

கோவில் குளத்தை சீரமைக்க தமிழக அரசு 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது, கோவில் சீரமைப்பு பணி துவக்க விழா துவங்கியது
காஞ்சிபுரம் அழகிய சிங்கபெருமாள் கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் என, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வெளியே உள்ள தெப்பகுளம், 15 ஆண்டுகளுக்கு முன் சீரமைப்பட்டு, தெப்போற்சவம் நடந்து வந்தது. அதன்பின் முறையான பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள் மண்டி குளம் சீரழிந்ததால் தெப்போற்சம் நடத்தவில்லை. இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையின்போது, குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், இவ்வழியேசெல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தவறி குளத்திற்குள் விழாமல் இருக்க, தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இக்குளத்தை துார்வாரி சுற்றுச்சுவர் அமைத்து சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், இக்கோவில் குளத்தை சீரமைக்க தமிழக அரசு 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கோவில் சீரமைப்பு பணி துவக்க விழா நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் வஜ்ரவேல், ஆய்வாளர் திலகவதி கோவில் பட்டாச்சாரியார் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story