கோவூர் பஸ் நிலையம் ரூ.50 லட்சத்தில் சீரமைப்பு
கோவூர் பேருந்து நிலையம்
கோவூர் பஸ் நிலையம் ரூ.50 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.
குன்றத்துார் - போரூர் நெடுஞ்சாலையில், கோவூர் இ.பி., பகுதியில் உள்ள பேருந்து நிலையம் பராமரிப்பின்றி, பயன்பாடின்றி இருந்தது. இதனால், அரசு பேருந்துகள் நிலையத்தின் உள்ளே வராமல், வெளியே நெடுஞ்சாலையில் பயணியரை ஏற்றிச் சென்றன. இந்நிலையில், இந்த பேருந்து நிலையம் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. நிலையத்திற்கு புதிதாக கூரை, தரை, இருக்கைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
Next Story