விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு

விழுப்புரம் அருகேயுள்ள மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்களின்றி பூஜை நடந்தது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி துரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்களின்றி பூஜை நடைபெற்றது. விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலில் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி கோயிலை பூட்டி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பல்வேறு கட்சியினர் கோயிலை திறந்து வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென அப்போது தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் இருதரப்பினரையும் ஆர்டிஓ முன்னிலையில் பல கட்ட பேச்சு வார்தைகளில் ஈடுபட்டனர்.

இதன் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கோயிலை திறந்து பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் ஒரு கால பூஜையை மட்டும் நடத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று காலை விழுப்புரம் சரக டிஜஜி, எஸ்பி., அறநிலையத்துறை அதிகாரிகள், ஆர்டிஓ, தாசில்தார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் 9 மாதங்களுக்கு பிறகு இன்று காலை அம்மன் கோவிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீலீனை அகற்றினர். தொடர்ந்து கோவிலை சுத்தம் செய்து, பக்தர்கள் யாருக்கும் அனுமதியின்றி பூஜை மட்டும் செய்யப்பட்டது. முன்னதாக இதற்கான விரிவான ஏற்பாடுகளை, நேற்று மாலை முதலே மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் இணைந்து மேல்பாதி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து, வெளியூர்காரர்களை அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இன்று காலை அப்பகுதி வழியாக செல்லும் அனதை்து வாகனங்களையும் சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் பேருந்துகளிலும் உள்ளூர்காரர்களை தவிர வேறு யாரும் பயணம் செய்தாலும் ஊருக்கு வெளியே இறக்கிவிடப்பட்டு திருப்பி அனுப்பினர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எப்போதும்போல் பள்ளிகளுக்கும், வேலைகளுக்கும் சென்றனர். மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்படுவதை காண கோவில் முன்பு அதிகளவு கூடியிருந்தனர். கோவில் உள்ளே அனுமதியில்லாததால் கோவிலுக்கு வெளியே நின்று கோவில் திறந்து பூஜை செய்வதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முதலே பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அதேபோல் கோயில் பற்றி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேல்பாதி கிராம நுழைவு வாயிலான தேசிய நெடுஞ்சாலையிலேயே செய்தியாளர்களை காவல்துறை தடுத்து நிறுத்தினர். அதிகாலை 4 மணி முதல் காத்திருந்தும் அனுமதி மறுக்கப்பட்டு எவ்வித பதிலும் அளிக்காத மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையையும் கண்டித்து செய்தியாளர்கள் விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Tags

Next Story