கால்வாய்களை சீரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும்: முன்னாள் அமைச்சர்

கால்வாய்களை சீரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும்: முன்னாள் அமைச்சர்

வெள்ள பாதிப்பை தடுக்க கால்வாய்களை சீரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.


வெள்ள பாதிப்பை தடுக்க கால்வாய்களை சீரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமடையும் அடுத்து உடனடியாக தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் திருப்பதிசாரம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் 20 நாட்களுக்கு மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இப்போதும் தோவாளை போன்ற பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குளங்கள் உடைந்துள்ளன.

உடப்புகளை சரி செய்யாமல் மணல் மூட்டைகளை மட்டுமே அடுக்கி வைத்து தற்போது தற்காலிக தீர்வு காண்கிறார்கள். ஆண்டுதோறும் மழை பெய்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். குறிப்பாக சிறு பாலங்கள், கால்வாய்களை சீரமைத்து தடுப்பு சுவர் கட்ட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags

Next Story