சேதமடைந்த செங்கிப்பட்டி மேம்பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்

சேதமடைந்த செங்கிப்பட்டி மேம்பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
செங்கிப்பட்டி மேம்பால பணிகள் தொடக்கம்
சேதமடைந்த செங்கிப்பட்டி மேம்பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டியில் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த மேம்பாலம் சீர்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

செங்கிப்பட்டியில் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், பாலத்தின் தென்புறம் 30 மீட்டர் நீளத்துக்கு பக்கவாட்டு சுவரின் பிளாக்குகள் சில மாதங்களுக்கு முன்பு மழைநீரால் பெயர்ந்து விழுந்தது.

இதனால் பாலத்தின் மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இரு புறத்தின் அணுகு சாலைகள் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இந்தப் பாலத்தை சீர்படுத்த பல் வேறு அமைப்புகள், கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது வடபுறத்தில் பக்கவாட்டு சுவர் சரிசெய்யப்பட்டு, தென்புற பக்கவாட்டு சுவற்றில் இருந்த பிளாக்குகளை அகற்றி சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைநீர் தேங்கி பக்கவாட்டு சுவர் பிளாக்குகள் சரிந்து பாலம் பழுதடைந்தது என்றும், மழைநீர் சுவரின் மேல் தேங்கி வழியாமல் இருப்பதால் வெளியேற ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story