திண்டிவனம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்

திண்டிவனம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பாலத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேம்பாலத்தில் உள்ள சென்னை, விழுப்புரம், புதுச்சேரி மார்க்க பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டது.

இதையடுத்து மேம்பா லத்தின் செஞ்சி மார்க்க பகுதியில் சீரமைப்பு பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி காரணமாக மேம்பாலம் மேல் பகுதி மற்றும் மேம்பாலத்தில் இருந்து நேரு வீதி செல்லும் சாலை ஆகிய இரண்டு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவ ரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுப்பாதையாக மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடை யூறாக வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என நெடுஞ் சாலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story