சீரமைக்கப்பட்ட கோவில் குளம் கனமழை காரணமாக இடிந்து விழுந்து சேதம்
திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள TMC காலனி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைத்து கட்டப்பட்ட கோவில்குளம் கனமழை காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள TMC காலனி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைத்து கட்டப்பட்ட கோவில்குளம் கனமழை காரணமாக இடிந்து விழுந்து சேதம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள TMC காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் கோயில் குளம் உள்ளது. அதை சீரமைத்து தடுப்புசுவர் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த கோயில்குளத்தை அண்ணாநகர்,கௌதபேட்டை ,பெரியார்நகர் ,காமராஜர்நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் நேற்று திடீரென பெய்த கனமழையால் சீரமைத்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைத்து தடுப்புச்சுவர் கட்டும்பணி நடைப்பெறும் போதே சுற்றுச்சூழல் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகார் மனுமீது எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த கோயில் குளத்திற்கு அருகாமையில் அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேலும் அப்பகுதிமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.மேலும் காலைகடன் கழிப்பதற்கு கூட கழிவறைவசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே திறந்தவெளி கழிப்பறை பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.