சாலையோரம் இருந்த பெரும்பள்ளம் சீரமைப்பு

சாலையோரம் இருந்த பெரும்பள்ளம் சீரமைப்பு

செய்யூரில் சாலையோரம் இருந்த பெரும் பள்ளம் சீரமைக்கப்பட்டது.


செய்யூரில் சாலையோரம் இருந்த பெரும் பள்ளம் சீரமைக்கப்பட்டது.
செய்யூரில் இருந்து தண்ணீர்பந்தல் வழியாக, ஆற்காடு செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இது, தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, வெடால் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது. தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. கடந்த பருவ மழையின் போது, இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து, சாலை ஓரத்தில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, சுமார் 5 அடி பள்ளம் உருவாகியது. சாலை ஓரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் எதிரொலியாக, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையோரத்தில் இருந்த பெரும் பள்ளத்தை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மண் கொட்டி சீரமைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story