ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டு கடன் முகாம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டு கடன் முகாம்
X

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டுக்கடன் முகாம்

சேலம் மாவட்டம், ரெப்கோ ஹோம் பைனான்சின் துணை கிளைகளில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்சின் சேலம் கிளை, பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபம் எதிரே செயல்பட்டு வருகிறது. இதன் துணை கிளைகளான ஆத்தூர், மேட்டூரில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமில் பங்கேற்க வந்த அனைத்து விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களும் உடனுக்குடன் பரீசிலிக்கப்பட்டது. மேலும் ரூ.22 கோடி வீட்டு வசதி கடன்களுக்கான முன் அனுமதி கடிதங்கள் கிளையின் முதன்மை மேலாளர் சரவணன் வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை துணை மேலாளர் மணிகண்டன், சேதுலட்சுமி, ஆத்தூர் கிளை பொறுப்பாளர் சுரேந்திரன், மேட்டூர் கிளை பொறுப்பாளர் அருள்குமார், அதிகாரிகள் பாலாஜி, தினேஷ், சாமுண்டீஸ்வரி, சதீஷ், சதாசிவம், அபிநயா, முரளி ஆகியோர் செய்து இருந்தனர். வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த முகாம் வருகிற 29-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story