சேலத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் புதிய கிளை திறப்பு
ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் சேலம் மண்டல அலுவலகம் புதிய பஸ் நிலையம் அருகே பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபம் எதிரே முதல் மாடியில் தொடங்கப்பட்டுள்ளது.
இதனுடன் சேலம் கிளையும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. நிறுவனத்தின் கோவை மற்றும் சேலம் மண்டல வளர்ச்சி மேலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவரும், ரெப்கோ வங்கியின் இயக்குனருமான தங்கராசு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ராஜா குத்துவிளக்கு ஏற்றினார்.
இதில் சேலம் கிளை மேலாளர் கோவிந்தராஜ், முன்னாள் கிளை மேலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் மணிகண்டன், சேதுலட்சுமி, சுரேந்திரன், சதீஷ், சதாசிவம், தினேஷ், அபிநயா மற்றும் சிவக்குமார் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மண்டல மேலாளர் கே.சி.ஷிஜூ செய்திருந்தார்.