துளிர் விட்ட மறு நடவு ஆலமரம் - பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

துளிர் விட்ட மறு நடவு ஆலமரம் - பசுமை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

துளிர் விட்ட ஆலமரம் 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தாநல்லூர் பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் அரசமரம் மற்றும் ஆலமரம் அதிக அளவில் நிழல் தருவதால் விவசாயம் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதாக கூறி அம்மரங்களை அகற்ற திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் இதனை அறிந்த வாலாஜாபாத் பசுமை இயக்க அமைப்பினர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து அந்த இரு மரங்களையும் மறு நடவு செய்ய திட்டமிட்டது.

பத்தாயிரம் கிலோ எடை கொண்ட இம்மரங்களை எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த இரு மரங்களும் ஜேசிபி உதவியுடன் லாரி ஏற்றப்பட்டு வாலாஜாபாத் ரயில்வே நிலையம் அருகே கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதை மறு நடவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொண்டு கடந்த 3ம் தேதி நடப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் எடுத்த வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர், நிர்வாகம், அலுவலர்கள் மற்றும் பசுமை இயக்க சரண் குழுவினர் ஆகியோரை சமூக ஆர்வலர்கள் இயற்கை அலுவலர்கள் பெரிதும் பாராட்டினர்.

இந்நிலையில் ஒரு மாதம் ஆகிய நிலையில் தற்போது இந்த ஆலமரம் மற்றும் அரச மரங்களிலிருந்து துளிர் விட ஆரம்பித்து கிளைகள், இலைகள் என வந்துள்ளதால் பசுமை ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல ஆயிரம் மரங்களை இழந்த நிலையில் தற்போது தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஓரங்களில் பணி நிறைவுற்ற பகுதிகளில் மரங்களை நட உத்தரவிட்டு இருந்ததும், இதுபோன்று பசுமை இயக்கங்களும் ஆங்காங்கே இது போன்ற செயல்களை செய்து வருவது இயற்கையை அதிகரிக்கும் செயலை பெரிதும் அனைவரும் வரவேற்கின்றனர்.

Tags

Next Story