50 ஆண்டு கால மரங்கள் மீண்டும் மறு நடவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலை பணிகளுக்காக ஏராளமான நிலம் கையகபடுத்தபட்டும், இதே போல் மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விரிவாக்கம் என நடைபெற்று வரும் நிலையில் இங்குள்ள 50 ஆண்டுகால மரங்களை அப்புறப்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகற்றப்பட்ட மரங்கள் அனைத்தும் அனாதையாக சாலை ஓரங்களில் இருக்கும் நிலைகளை கண்ட வாலாஜாபாத் விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் லையன் கிளப் நிர்வாகம் இம்மரங்களை மறு நடவு செய்ய தீர்மானித்து தலைமை நிர்வாகி சரண் மற்றும் லயன் வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு கடந்த ஓராண்டாகவே இப்ப பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் தொழிற்சாலை பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்ட மரங்கள் சின்னிவாக்கம், புத்தகரம் மற்றும் நாய்க்கன் குப்பம் பகுதியில் உள்ளதாக அறிந்து அங்கு சென்று குழுவினர் பார்த்தபோது 50 ஆண்டுகால ஐந்து ஆலமரம் மற்றும் இரண்டு அரச மரங்களை லாரிகள் உதவியுடன் எடுத்து வந்து வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிரேன் மற்றும் ஜேசிபி உதவியுடன் மறு நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்ட இளைஞர்களும், பசுமை ஆர்வலர்களும் இவர்களுடன் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டனர்.தொடர்ந்து பல ஆண்டு கால மரங்களை புதுப்பித்து மறு நடவு செய்யும்படிகளை செய்து வரும் இவர்களை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.