தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் அறிக்கை

தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் அறிக்கை

தமிழக அரசு மீண்டும் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது மன வேதனை அளிக்கின்றது என தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் அறிவித்துள்ளது.


தமிழக அரசு மீண்டும் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது மன வேதனை அளிக்கின்றது என தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் அறிக்கை. தமிழக அரசு மீண்டும் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது மன வேதனை அளிக்கின்றது ஏற்கனவே 300% விலை ஏற்றப்பட்டு வியாபாரம் செய்ய முடியாமல் 40% தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டனர்.தற்போது யூனிட் மின்சாரத்திற்கு 34 காசு ‘சர்சார்ஜ்' வாரிய முடிவு செய்து இருப்பது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே வியாபாரம் இல்லாத சூழ்நிலையில் மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தினாலும் தொழில் பார்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேலையில் மீதம் இருக்கின்ற 60% தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பது மட்டுமல்லாமல் தனியார் மற்றும் பேங்கில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இது மேலும் தொழில்துறையினருக்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும். இதை மாநில அரசு கணக்கில் கொண்டு மீண்டும் ஒருமுறை பரிசினை செய்து தடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே சிறு குறு தொழில்கள் படிப்படியாக குறைந்து அழிந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த கட்டண உயர்வும் பெரு சிரமத்திற்கு உள்ளாக்கப்படும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தொழில்துறையினர் தக்க பதில் அளிப்பார்கள்.

Tags

Next Story