நிருபர் கைது :இந்து முன்னணி கண்டனம்
வி.பி. ஜெயக்குமார்
தூத்துக்குடியில் செய்தியாளரை காவல்துறையினர் கைது செய்ததற்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் . வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனது தந்தை காலில் உள்ள விரலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்து முடித்த பின்பு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய உபகரணங்களான கத்திரிக்கோல் போன்றவற்றை அவரது மகனிடம் (சுமார் 9 வயது மதிக்கத்தக்க சிறுவனிடம்) கொடுத்து கழிவறை அருகே உள்ள கை கழுவும் கோப்பையில் கழுவி வர சொல்லி உள்ளனர். பொதுவாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கத்தி கத்திரிக்கோல் போன்ற அனைத்து பொருட்களையும் கொதி நீரில் நன்றாக சுத்தம் செய்த பின்பு(Sterilize) பயன்படுத்துவது தான் மருத்துவமனையின் வழக்கம். அந்த சிறுவன் கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு கழிவறை அருகே உள்ள இடத்தில் அதனை கழுவும் போது அந்த மருத்துவமனைக்கு தனது உறவினரை பார்ப்பதற்கு எதிர்ச்சையாக வந்திருந்த செய்தியாளர் இன்பராஜ் என்பவர் இந்த அவலத்தை கண்டு உடனடியாக தனது செல்போனில் படம் பிடித்து செய்தியாளர் குழுவில் பதிவிட்டு, அது சமூக ஊடகங்களில் விரைவாக பரவியது. இந்த நிலையில் நேற்று மதியம் மருத்துவமனை முதல்வர் சிவகுமார் தவறு நடந்துள்ளது என்பதாக ஒத்துக் கொண்டு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் நேற்று மாலை 5:30 மணி அளவில் அதே முதல்வர் அந்த நோயாளிகளிடம் வற்புறுத்தி ஒரு புகார் கம்ப்ளைன்ட் தயார் செய்து தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்து செய்தியாளர் இன்பராஜ் மீது வழக்கு பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். இதன் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ள தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் செய்தியாளர் இன்பராஜ் மீது பொய் வழக்கு பதிவு செய்து இன்று காலை அவரை கைது செய்து பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்துள்ளனர். வீடியோவின் உண்மைத்தன்மையை விசாரித்து கண்டறியாமல் நடந்த தவறை மூடி மறைக்கும் வண்ணம் அதனை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. உண்மையான நிகழ்வுகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்து முன்னணி என்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு உண்மை சம்பவங்களை இது போல் வெளிக்கொண்டுவரும் நபர்களின் மீது அடக்கு முறையை பயன்படுத்தும் தமிழக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.