குடியரசு தின விழா கொண்டாட்டம்

75வது குடியரசு தின விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்ற 75 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர்ஜெயசீலன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர் சமாதானத்திற்கான வெண்புறாக்களை பறக்கவிட்ட ஆட்சியர், தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டபின் காவல்துறை, தீயணைப்புத்துறை,ஊர்க்காவல் படை மற்றும் தேசிய மாணவர்படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 135 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்களை அணிவித்தார்.பின்னர் வருவாய்த்துறை,உள்ளாட்சித்துறை,மருத்துவத்துறை,பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கும்,சிறந்த பெண் தொழில் முனைவோர்,பட்டாதாரி விவசாயிகள், சிறந்த தொழில் நிறுவனங்கள் என 415 பேர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி மாணவ,மாணவியரின் தேசப்பற்றுமிக்க கண்கவர் நடனநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story