திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் குடியரசு தின விழா

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அனைவருக்கும் மரியாதை ஏற்றுக் கொண்டார் ‌.பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய 40 போலீசருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை, வருவாய்த்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு நலச்சங்கங்கள், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ 61 லட்சத்து 82 ஆயிரத்து 972 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது..

Tags

Next Story