திருப்பூரில் குடியரசு தினவிழா
குடியரசு தினம்
இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழா ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டப்பட்டது. ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் முவர்ன வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டனர்.
தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வரிசுதரார்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேளாண்மை-உழவர் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, தொழிலாளர் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 31 பயனாளிகளுக்கு 1.88 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.