பெரம்பலூரில் குடியரசு தின ஆலோசனை கூட்டம்

பெரம்பலூரில் குடியரசு தின ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

பெரம்பலூரில் குடியரசு தின விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசு தின விழா கொண்டாடுதல் தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியத் கற்பகம் தலைமையில்ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தபோது, இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விழாவின்போது, காவல் துறையினர் மூலம் காவல்துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்திட காவல்துறையினர் தகுந்த ஏற்பாடு செய்திட வேண்டும்.

விழா நடைபெறும் மேடை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் அவர்களின் வாரிசுதாரர்கள் அமரும் இடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றிற்கு முறையான இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைவருக்கும் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்திட வேண்டும். நிகழ்விடத்தில் மருத்துவக்குழுவினர், தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் காவலர்கள் பணியமர்த்த வேண்டும். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பள்ளிக் கல்வித் துறையினர் ஒருங்கிணைக்க வேண்டும்.குடியரசு தின விழா சிறப்பாக அமைந்திட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை முதன்மை அலுவலர்கள், காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story