குடியரசு தினவிழா - தேசிய கொடியை ஏற்றிய ஆட்சியர்
குடியரசு தின விழா
அரியலூரில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்திய திருநாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சமாதான புறாவினை பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 52 பயனாளிகளுக்கு 1 கோடியே 38 லட்சத்தி 58 ஆயிரத்தி 309 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 309 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story