தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

திருமண அலங்கரிப்பாளர்களுக்கு தனி நல வாரியம் வேண்டும் என தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் சார்பாக முதல் மாநில மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பலர் கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன திருமண அலங்கரிப்பாளகளுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் திருமண அலங்கரிப்பாளர்களை இணைக்க வேண்டும் செப்டம்பர் 17 திருமண மற்றும் திருவிழா அலங்கரிப்பாலர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மாநில தலைவர் பாலமுருகன் தஞ்சை அவை தலைவர் கோவிந்தராஜன் மாநாடு விழா அமைப்பாளர் நத்தம் பிரபு தஞ்சை மாவட்ட பொருளாளர் அருண் பிரசாத் மாநில துணைத்தலைவர் மணிவண்ணன் துணைபு பொதுச் செயலாளர் அருள் பிரசாத் மாநில பொருளாளர் சின்னப்பன் மாநில செயலாளர்கள் காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story