அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்க கோரிக்கை

அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்க கோரிக்கை
X

அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்க கோரிக்கை

அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்க கோரிக்கை

அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் நாமக்கல் ராமு, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சருக்கு அப்புப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குர், மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஆசிரியர்களின் நிர்ப்பந்தத்தினால், ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு, அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று, 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும்..இல்லாவிட்டால் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஆசிரியர்களால், கட்டாய நிர்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story