கிராம நிர்வாக அலுவலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை !
அடிப்படை வசதிகள்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 40 கிராமங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில் மேம்படுத்த அரசு அலுவலகமாக கிராம நிர்வாக அலுவலங்கள் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிப்பிட வசதிகளை அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது.
கிராம மேம்பாட்டிற்காக இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலகங்கள் அந்தந்த கிராமங்களில் சட்ட ஒழுங்கு பாதுகாத்தல், கிராம அசாதாரண சூழ்நிலையின் போது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தல், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல், கிராமப்புறங்களில் அனைத்து விதமான கணக்கெடுப்புகள், அடிப்படை வசதி பராமரிப்பு, நிலவரி மற்றும் சொத்துவரி வசூலித்தல், அயல்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கும் உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் பணியாட்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிப்பிட வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் சுமார் 40 அலுவகங்களில் அதிகபட்சமாக 5 அலுவலகத்தில் மட்டுமே கழிப்பிட வசதிகள் உள்ளதாகவும், பெண் பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனவும் உடனடியாக இது போன்று கழிப்பிட வசதிகள் இன்றி இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலத்தில் கழிப்பிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.