திறந்தவெளி கிணற்றுக்கு கம்பிவளையம் அமைக்க கோரிக்கை

காளிப்பட்டியில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே, கடந்த 40 வருடங்களுக்கு முன்னர், பொதுக்கிணறு தோண்டப்பட்டது. இதுவரையில், கம்பிவளையம் எதுவும் அமைக்கப்படவில்லை. பஸ்க்காக வருகின்ற பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் கிணற்றின் சுவரின் மீது உட்கார்ந்து பயணம் செய்கின்றனர்.

இதனால், தவறி உள்ளே விழ வாய்ப்புள்ளது. அவ்வாறு விழுந்தால் உயிர்பலி கூட நேரலாம். ஆகவே, ஆபத்து நேரும் முன்னரே கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story