பவுஞ்சூர் அருகே மினி டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற வேண்டுகோள்

பவுஞ்சூர் அருகே மினி டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற வேண்டுகோள்

காலியாக உள்ள டேங்க்

பவுஞ்சூர் அருகே மின் மோட்டாரை சீரமைத்து, மினி டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

பவுஞ்சூர் அருகே உள்ள இரணியசித்தி ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இப்பகுதிவாசிகள் கைபம்ப் வாயிலாக தண்ணீர் எடுத்து, துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், பாத்திரங்கள் கழுவுவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மின் மோட்டார் பொருத்தி, குடியிருப்பு பகுதியில் மினி டேங்க் அமைக்கப்பட்டது. நாளடைவில் முறையான பராமரிப்பு இல்லாமல், மினிடேங்குகளின் மோட்டார்கள் பழுதடைந்ததால், குடியிருப்பு பகுதியில் உள்ள இரு மினி டேங்கிற்கு தண்ணீர் ஏற்றப்படாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கூடுதல் நீர் ஆதாரத்திற்கு அப்பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் மோட்டாரை சீரமைத்து, மினி டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story