கிரிவல வீதியில் அனுமதி வேண்டி கோரிக்கை !!
கிரிவல வீதி
யாசகர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கும் நபர்களின் வாகனத்தை அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல்: உச்சநீதி மன்றம் விடுக்கபட்ட அறிவிப்பை தொடர்ந்து பழனி மலைக்கோவிலை சுற்றி கிரிவல வீதி பகுதியில் வாகனம் அனுமதி இல்லை என்று தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவிஷயமான தேவைக்கு செல்லும் சிலருக்கு அனுமதி வழங்க வேண்டும். கிரிவல வீதியை நம்பி அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யாசகர்கள் உள்ளனர். அவர்களுக்கு தினமும் தன்ஆர்வலர்கள் சிலர் உணவு தயார் செய்து கொண்டு வந்து வழங்கி வந்தனர். தற்பொழுது 2 நாளாக சரியாக வழங்கப்பட முடியவில்லை. எனவே குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கும் நபர்களின் வாகனத்தை அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story