அரூரில் உலர் தீவன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

அரூரில் உலர் தீவன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

வைக்கோல்

அரூரில் கால்நடைத்துறை சார்பில், மானிய விலையில் உலர் தீவன கிடங்கு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சரக்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்ட வைக்கோல், அரூர் சுற்றுவட்டார பகுதியில் கட்டு ஒன்று ரூ.275க்கு விற்பனை செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், தீர்த்தமலை சுற்றுவட்டார பகுதியில் வைக்கோல், மக்காச்சோளம் உள்ளிட்ட உலர் தீவனங்கள் தட்டுப்பாட்டால்,கால்நடைகளுக்குதீவன.தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், அரூர்,மொரப்பூர் பகுதிகளுக்கு லாரிகளில் வைக்கோலை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், விழுப்புரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, சரக்கு வாகனங்களில் வைக்கோலை எடுத்து வருகிறோம். ஒரு கட்டு வைக்கோல் ரூ.250 முதல் 270 வரை விற்பனை செய்யப்படுகிறது. அரூர் பகுதியில் தீவன தட்டுப்பாட்டால், வைக்கோல் விற்பனை ஜோராக நடக்கிறது,' என்றனர்.

இதனிடையே, கால்நடைத்துறை சார்பில்,மானிய விலையில் உலர் தீவன கிடங்கு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story