மக்களைத் தேடி மருத்துவம் - அரசு பணியாளர்களாக நியமிக்க கோரிக்கை
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை அரசு பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளளனா்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை அரசு பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை அரசு பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு "தமிழ்நாடு அரசின் மக்களைத்தேடி பருத்துவத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றோம். 2 மணி நேர பணிக்கு, 4500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எங்களுடைய பணியாக வீடு வீடாக மருந்து வழங்குவது. ரத்த அழுத்தம் மற்றும் நிரழிவு நோய் கண்டறிதல் என்று கூறப்பட்டது. தற்போது கடந்த 4 மாதங்களாக கூடுதல் பணிகள் எங்களுக்கு வழங்கப்படுகிறது. பணியிடங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல், பல இன்னல்களையும், மன உளைச்சல்களையும் சந்தித்து வருகின்றோம். எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி, தமிழக அரசு எங்களை ஊழியர்களாக அங்கீகரித்து, அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்க அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story