கிளியாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற கோரிக்கை

கிளியாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற கோரிக்கை

குப்பை கழிவுகள்

கிளியாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கிளியாற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை அருகே கொட்டி செல்கின்றனர். இந்த குப்பை கழிவுகளை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர்.

இதனால், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், புகையின் காரணமாக கண் எரிச்சலால் அவதி அடைகின்றனர். பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் கழிவுகள் மற்றும் உணவகங்களில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள், நவீன எரிவாயு தகன மேடையை கடந்து சென்று, கிளியாற்றில் கொட்டி செல்கின்றனர்.

நவீன எரிவாயு தகன மேடையின் நுழைவாயில் இரும்பு கதவுகள் திறந்து கிடக்கின்றன. இதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் இவ்வழியாக வாகனங்களில் குப்பை கழிவுகளை எடுத்து வந்து, கிளியாற்றில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

எனவே, இரும்பு கதவுகளை பூட்டி பராமரிக்க வேண்டும். கிளியாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை, முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story