வி.ஏ.ஓ., அலுவலகத்தை சீரமைக்க வேண்டுகோள்
செய்யூர் அருகே வி.ஏ.ஓ., அலுவலகத்தை சீரமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், எல்லையம்மன் கோவில் -- செய்யூர் செல்லும் சாலையில், வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. ஓதியூர், நைனார்குப்பம், முதலியார்குப்பம், தழுதாளிக்குப்பம், முட்டுக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் பயன் படுத்துகின்றனர்.
இந்த கட்டடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் சேதமடைந்து, மழைக்காலங்களில் கட்டடத்தின் உள்ளே மழைநீர் ஒழுகி, நிர்வாகம் சார்ந்த முக்கிய கோப்புகள் சேதம் அடைகின்றன.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story