அக்ராபாளையம் ஏரிக்கரை சாலையை சீரமைக்கக் கோரிக்கை
சேதமடைந்துள்ள சாலை
ஆரணியை அடுத்தஅக்ராபாளையத்தில் பலத்த மழையால் சேதமடைந்த ஏரிக் கரை சாலையை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அக்ராபாளையம் கிராமத்தில் ஏரிக்கரை சாலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறிய மேம்பாலம் கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், அந்த வழி யாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கிராமத்தின் நடுவே உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச் சாலையில் சென்று வந்து கொண்டிருக் இந்நிலையில், தற்போது பெய்த பலத்த மழையால் இந்த சாலை முற்றிலுமாக சேதமடைந்து சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
இதனால், அக்ராபாளையத்திலிருந்து அருகிலுள்ள தனியார் நூற்பாலைக்கு வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் தனியார் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றி சேவூர் வழி யாக சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குறித்த நேரத்துக்கு செல்லமுடியாதநிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச் சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.